பௌலிங்கில் சொல்லி அடித்த இந்திய அணி.. சுருண்டு விழுந்த பாகிஸ்தான் | IND Vs PAK | T20

Update: 2024-10-07 01:50 GMT

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

துபாயில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 106 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஷஃபாலி வெர்மா-ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஷஃபாலி வெர்மா 32 ரன்களுக்கு கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து நின்று ஆடினார். ஜெமிமா 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் சேர்த்தார். 19வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்