ஆசிய போட்டிகள் - மகளிர் கால்பந்து லீக் போட்டி-சீன தைபேவிடம் இந்தியா தோல்வி

Update: 2023-09-22 16:48 GMT

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு தொடரின் மகளிர் கால்பந்து லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் சீன தைபேவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. வெங்சோ நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி தொடங்கியதும் இந்திய வீராங்கனை அஞ்சு தமாங் கோல் அடித்தார். தொடர்ந்து 68வது நிமிடத்தில் சீன தைபே வீராங்கனை லாய் லி சின் பதில் கோல் அடித்தார். பின்னர் 83வது நிமிடத்தில் தைபே வீராங்கனை சுயான் கோல் அடிக்க, பரபரப்பான ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் சீன தைபே வெற்றி கண்டது.

Tags:    

மேலும் செய்திகள்