ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் அமெரிக்காவை இந்தியா துவம்சம் செய்தது. ப்ளோம்ஃபோன்டெயின் (Bloemfontein) நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி சதம் விளாசினார். முஷீர் கான் அரைசதம் அடித்தார். பின்னர் 327 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது