"ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - எனது முதல் வேலை" - ஐ.சி.சி. புதிய தலைவராக ஜெய் ஷா

Update: 2024-08-29 23:50 GMT

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை வெற்றிகரமாக கொண்டு சேர்ப்பதே தமது முதல் வேலை என ஐசிசி புதிய தலைவராக தேர்வாகி உள்ள ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.யின் புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக உள்ள ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி பேட்டியளித்துள்ள அவர், 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில், கிரிக்கெட் விளையாட்டை வெற்றிகரமாக கொண்டு சேர்ப்பதே தம்முடைய முதல் வேலை என தெரிவித்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெறும் இந்த நவீன காலகட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்