"போன முறை விட்டுட்டேன்.." "ஆனா இந்த முறை விடமாட்டேன்.." கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்..
கடந்த ஆண்டு தான் திட்டமிட்டிருந்த இலக்குகளை இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார். 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது கைப்பட எழுதிய ரெசொல்யூசன்களை (resolution) இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்... அதிக சதங்கள் அடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 2023ம் ஆண்டு திட்டமிட்டபடி அமையாவிட்டாலும் 2024ம் ஆண்டு இலக்குகளை அடைவோம் என்று கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.