இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள்

Update: 2023-12-12 14:33 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர் யுவராஜ் சிங்... டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தவர், வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்தவர், 2011 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான யுவராஜ் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்