ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டிக்கு நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் முன்னேறியுள்ளார். அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் அசர்பைஜான் வீரர் நிஜத் அபசோவை வீழ்த்திய கார்ல்சன், 2ம் சுற்றில் நிஜத் அபசோவுடன் சமன் செய்தார். இதன்மூலம், 1.5க்கு 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற கார்ல்சன், முதல் முறையாக இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்தார். இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா அல்லது அமெரிக்க வீரர் கரனோ உடன் கார்ல்சன், மோத உள்ளார்.