ஐபில் கிரிக்கெட் தொடரின் 59வது லீக் போட்டியில் சென்னையை 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது.குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி, சதம் விளாசி அசத்தினர்.பின்னர், 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் நடையைக் கட்டினர்.கேப்டன் ருதுராஜ் செய்க்வாட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த நிலையில், டேரைல் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சென்னையை சரிவில் இருந்து மீட்டது. எனினும் இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில் தேவைப்படும் ரன் விகிதம் அதிகரிக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி196 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது, சென்னை ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.