இப்படி ஒரு பெருங்கடலை உலகுக்கே அறிமுக படுத்தியது இந்தியான்னு தெரியுமா?

Update: 2024-07-20 15:02 GMT

புராதன காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் அரசர்களின் விளையாட்டு சதுரங்கம்...

அன்று மரப்பலகையில்... இன்று கணினியில்...

உடலுக்கு வேலை தரும் விளையாட்டுகளுக்கு மத்தியில் முழுக்க முழுக்க மூளை மட்டுமே மூலதனம் சதுரங்கத்தில்... அதிர்ஷ்டத்திற்கு வேலையில்லை... தந்திரமே மந்திரம்...

ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு ராஜா.. ஒரு ராணி... 2 மந்திரிகள்... 2 யானைகள்... 2 குதிரைகள்... 8 சிப்பாய்கள்...

எல்லைகளில் யானைகள் பாதுகாக்க...பக்கத்தில் குதிரைகள் துணை நிற்க...மந்திரிகள் தந்திரத்துடன் காத்திருக்க... பக்கத்தில் ராணியுடன் படைக்குத் தலைமை தாங்குவார் ராஜா...

2வது வரிசையில் அரணாய் நிற்பர் சிப்பாய்கள்...

நமது அரசனைப் பாதுகாத்து...எதிரியின் அரசனை வீழ்த்த வேண்டும்...

அரசனைக் காத்தால் வெற்றி...அரசனை இழந்தால் தோல்வி...

நாகரீகம் வளர்ந்து விட்ட நிலையில் நவீன காலத்தில் சதுரங்கத்தை கணினி, தொலைபேசியிலும் விளையாண்டு வருகின்றனர் இந்தத் தலைமுறையினர்...

உலகமே விளையாடி மகிழும் சதுரங்கத்தை உலகத்திற்குத் தந்ததே இந்தியா தான்...

தமிழக சதுரங்க வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ், அரவிந்த் சிதம்பரம், வைசாலி, சவிதா, சர்வானிகா போன்றோரை உலகமே வியந்து பார்த்து வருகிறது...

"சதுரங்கம் ஒரு பெருங்கடல்...அதை கொசு கடக்கவும் கூடும்...யானை மூழ்கவும் கூடும்..." என்பது பழமொழி...

நேர மேலாண்மை... ஒழுக்கம்... பொறுமை... கவனம்... என அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் சதுரங்க விளையாட்டு உலகளவில் மேலும் கவனம் பெற வேண்டும் என்பதே செஸ் விளையாட்டு வீரர்களின் விருப்பமாக உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்