சேப்பாக்கத்தில் தோனி ரசிகருக்கு நேர்ந்த துயரம்.. 2,000 கிமீ தாண்டி வந்தும் சோகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே கூடாரம் போட்டு தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த கவுரவ் என்ற இளைஞரை போலீசார் அப்புறப்படுத்தினர். தோனியைப் பார்ப்பதற்காக 23 நாட்கள் சைக்கிளில் பயணித்து சென்னை வந்ததாகக் கூறிய அவர், தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதே தனது ஆசை என்றார். எனினும் அவரை போலீசார் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.