ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமே ஒரு இந்திய வீரர்தான் - அதிரடி ட்வீட்

Update: 2023-10-24 14:14 GMT

சென்னையில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு, முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆப்கன் அணியின் பேட்டிங், விக்கெட்டுகளுக்கு இடையிலான ஓட்டம் கடின உழைப்பை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அஜய் ஜடேஜாவின் பங்கு இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள சச்சின், இங்கிலாந்து - பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியை, கிரிக்கெட் உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்