டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சிந்து வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் நாக்-அவுட் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் நாக்-அவுட் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார். குரூப் ஜே பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில், ஹாங்காங் வீராங்கனை செயூங்குடன், சிந்து மோதினார். இதில், 21-க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில், முதல் செட்டை தனதாக்கிய சிந்து, 21-க்கு 16 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்த செட்டையும் கைப்பற்றி எளிதில் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கும் அவர் தகுதி பெற்று உள்ளார்.