"செய்வீர்களா?.. நீங்கள் செய்வீர்களா?" - ஜெயலலிதா பாணியில் கர்ஜனை - தொண்டர்களை கவர்ந்த ஈபிஎஸ்
தமிழக உரிமைக்காகவும் சிறுபான்மையினர் நலனுக்காகவும் போராடுவோம் என்பதை வலியுறுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
X தளத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில உரிமைகளை காப்பாற்றும் வகையில் அதிமுக தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என தெரிவித்தார். தமிழக உரிமை மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக போராடுவோம் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் சொத்து வரி , மின்சார கட்டணம் ,வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும் கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் பணியை நீங்கள் செய்ய வேண்டும் என நிர்வாகிகளிடம் அறிவுறுத்திய ஈபிஎஸ், செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என கேள்வி எழுப்பினார்.