திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஒரு வாய்ப்பை தந்துள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், திருச்செந்துறை போன்ற தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கவும்தான் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என்று கேட்பவர்கள், இந்து மத கோவில்களை மட்டும், மத நம்பிக்கையில்லாதவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படுவதை நியாயப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு போராடியவர்கள், வங்கதேச இந்துக்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்...