த.வெ.க. முதல் மாநாடு - இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

Update: 2024-09-08 02:10 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில், மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது குறித்து போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை, இன்று காலை 11 மணிக்கு வீடியோ அறிக்கையாக விஜய் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்