மகளிருக்கு மாதம் ரூ.1000... துணை முதல்வர் கொடுத்த அப்டேட்

Update: 2024-10-20 12:54 GMT

தமிழ்நாட்டில் தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், முதலமைச்சரின் அனுமதி பெற்று, நகரங்களுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆத்தூர், மேட்டூர், சேந்தமங்கலம் பகுதிகளில் மினி மைதானம் அமைக்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்