இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், இன்வெஸ்டோபியா குளோபல் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,
மத்திய பட்ஜெட் வெற்று காகிதம், அதில் பார்க்க கூடிய அளவிற்கு எதுவும் இல்லை என்று விமர்சித்தார். நாட்டை வலிமைப்படுத்த அதிக சக்தி வாய்ந்த என்ஜினாக தமிழ்நாடு திகழ்வதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இருந்து 30 சதவீத எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். புதிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வருகையால், இது மேலும் அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருமானம் மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.