காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-20 01:00 GMT
  • இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வகை செய்யும் 13-ஆவது சட்ட திருத்தம் படிப்படியாக நிறைவேற்றம்..... நாளை அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்....
  • "இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம்..." குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் வழங்குவோம் என்றும் அதிபர் ரணில் விக்ரமிசிங்கே உறுதி... 
  • மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பிரத்யேக திட்டம்... கல்வி கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றும், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் திட்டவட்டம்... 
  • இலங்கை அதிபர் தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு..... கருத்துக்கணிப்பில் முந்தினார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயகே... 
  • இந்திய ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான செய்திக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு... ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தி, யூகத்தின் அடிப்படையிலானது, தவறானது என விளக்கம்....
  • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் திடீர் தடியடி.... ஆதரவற்ற மக்கள் போராட்டத்தில் குதித்ததால் நள்ளிரவில் பரபரப்பு.....
  • கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை.... இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கல்வீச்சு.... பதற்றம்....
  • கொல்கத்தாவில் 41 நாள்களாக நீடித்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்....21ம் தேதி முதல் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு... 
  • "திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலந்திருந்தது உண்மை தான்..." ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடைபெற்றதாக லேப் ரிப்போர்ட் உடன் தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு... 
  • திமுக கூட்டணியில் தொடருவதா, வேண்டாமா? என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம்...ஆளுங்கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை......
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு........ திமுக கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பம் உள்ளதாகவும் விமர்சனம்.... 
  • தீட்சிதர்கள் விற்றதாகக் கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் விற்பனை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு..... இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..... 
  • சென்னையில் அமையவுள்ள சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநருக்கு விருப்பமில்லை.... அமைச்சர் மா சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு...... 
  • அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்.... டிரம்புக்கான ஆதரவு வாக்காளர்களிடையே அதே அளவில் நிலைத்திருப்பதாகவும் தகவல்...
  • சென்னை டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபார சதத்தால் இந்திய அணி ரன்குவிப்பு... அஸ்வின்-ஜடேஜா இணையின் கூட்டணி இன்றும் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.... 
Tags:    

மேலும் செய்திகள்