காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- வெள்ளத்தால் பாதிக்கப்பபட்ட ஆந்திரா, தெலங்கானாவுக்கு மூவாயிரத்து 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு........ பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தகவல்.....
- வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கான கடனை தள்ளுபடி செய்ய கால அவகாசம் கேட்டது மத்திய அரசு......... மத்திய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், தேசிய புவியியல் ஆய்வு மையம் பதிலளிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.....
- மத்தியப்பிரேதச மாநிலத்தில், பட்டப்பகலில் சாலையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்... வீடியோ வெளியான நிலையில், இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை...
- விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு படையெடுத்த பொதுமக்கள்.... கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்....... வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பயணிகள் அவதி..........
- தொடர் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்... பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு........
- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஆக்கிரமித்து கட்டியதாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்.... அனுமதியின்றி வீடுகள் இடிக்கப்பட்டதாகக் கூறி பெண்கள், குழந்தைகளுடன் கண்ணீர் விட்டு கதறல்.....
- விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 64 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி... பதற்றமான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு என டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்....
- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் ஆயிரத்து 519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி.... கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை....
- பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஓசூர் வீராங்கனை நித்யஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு.... தங்கப்பதக்கம் வெல்வது லட்சியம் என்று பேட்டி.......
- சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்.... இறுதிப்போட்டிக்கு தபாங் டெல்லி அணி முன்னேற்றம்....