"மோடி, அமித்ஷாவுக்கு எச்சரிக்கை".. "ராகுலின் பிரிட்டன் பிசினஸ்க்கு Proof".. சுப்பிரமணிய சாமி

Update: 2024-08-10 12:26 GMT

பிரிட்டன் குடியுரிமை பெற்றிருக்கும் ராகுல் காந்தியை மோடியும், அமித்ஷாவும் பாதுகாப்பது ஏன்...? என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், 2003-ல் பிரிட்டன் குடியுரிமையை பெற்ற ராகுல் அங்கு Back Opps நிறுவனத்தை தொடங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை செல்லாதது என குறிப்பிட்டிருக்கும் சுப்பிரமணிய சாமி, ராகுல் காந்தியை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டால் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வழக்கு தொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். ராகுல் காந்தி பிரிட்டனில் வருமான வரியை கட்டியதற்கான ஆதாரங்கள் என ஆவணம் ஒன்றையும் வெளியிட்டிருக்கும் சுப்பிரமணிய சாமி, ஏன் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்