சித்தராமையாவுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் போர்க்கொடி.. - கர்நாடகாவில் பரபரப்பு | Siddaramaiah

Update: 2024-07-26 15:53 GMT

மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணைய வீட்டுமனை நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில், கர்நாடக பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா பதவி விலகக்கோரி பா.ஜ.க எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். இதில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்