பாஜக-க்கு ஷாக் கொடுத்த கர்நாடகா.. சட்டப்பேரவையில் நடந்த சலசலப்பு | Modi | BJP | Thanthitv
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா, கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகாவில் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை, சட்டப்பேரவையில் அமைச்சர் ஷரன் பிரகாஷ் பாட்டீல் தாக்கல் செய்தார். இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.