மத்திய அரசு நியாயமற்ற வரிப் பகிர்வுக் கொள்கையை கையாள்வதாக கூறி, எட்டு மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமயா கடிதம் எழுதியுள்ளார். தனி நபர் GDP அதிகமாக உள்ள கர்நாடகா மற்றும் மற்றும் பிற மாநிலங்கள், அவற்றின் பொருளாதார செயல்திறனுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்று இதில் கூறியுள்ளார். அதிக அளவில் வரிப்பணத்தை செலுத்தும் மாநிலங்கள், விகிதாசாரமாக குறைந்த வரி பகிர்வை பெறுகின்றன என்று கூறியுள்ளார். இந்த நியாயமற்ற அணுகுமுறை கூட்டாட்சி உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், முற்போக்கான மாநிலங்களின் நிதி சுயாட்சியை அச்சுறுத்துவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதிக் கூட்டாட்சி பிரச்சனைகளை கூட்டாக விவாதிக்க பெங்களூரில் நடக்க உள்ள மாநாட்டிற்கு, 8 மாநில முதல்வர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.