"2004ல நடந்த மாறி அப்படியே இப்பவும் நடக்குது.. அப்போ 2024 ரிசல்ட்டும்.."

Update: 2024-03-17 10:18 GMT

2004 நாடாளுமன்றத் தேர்தலில் நடந்ததுதான், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நடக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி dtnext ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தி பெல்ட் மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கான வாய்ப்புகள் என்ன...? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இப்போது போல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என பாஜக பிரசாரம் செய்தது; வட மாநிலங்களில் பாஜக ஆதரவு அலை வீசுகிறது என கணிப்புகளும் வெளியானது; எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என விமர்சனமும் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாகவே இருந்தது, 10 ஆண்டுகள் அந்த கூட்டணி ஆட்சி செய்தது என குறிப்பிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின், 2004 தேர்தல் முடிவுகளே, 2024 தேர்தலிலும் பிரதிபலிக்கும், வரலாறு மீண்டும் திரும்பும் என குறிப்பிட்டுள்ளார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு, இந்தியா ஒளிர்கிறது என்ற பிரசாரத்தோடு தேர்தலை சந்தித்தது. தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்