BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட்... பரபரக்கும் இந்திய தேர்தல் களம்

Update: 2024-03-25 02:13 GMT

ஹரியானா மாநிலம், குருஷேத்திரா தொகுதி முன்னாள் எம்.பி.யான நவீன் ஜிண்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், 10 ஆண்டுகள் குருஷேத்ரா எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த சில மணி நேரத்தில் பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு இணைந்து பாடுபட இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, பாஜகவில் இணைந்தவுடன் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட நவீன் ஜிண்டாலுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்