தமிழகத்தில் தேசியமா, திராவிடமா என்ற நிலை தோன்றியிருப்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில், அக்கட்சியின் மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே கும்பகோணம் மற்றும் பொள்ளாச்சி மாவட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்..