சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

Update: 2024-09-14 12:26 GMT

உடல்நல குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், டெல்லியில் உள்ள சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், சீதாராம் யெச்சூரியின் மறைவால் மிகவும் வருத்தம் அடைந்து இருப்பதாகவும், திமுகவின் சார்பாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சார்பாகவும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்