காங். கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு
மூன்றாம் கட்ட வேட்பாளர் தேர்வு குறித்து
ஆலோசிக்க, வரும் 15-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பிரியங்கா காந்தி, போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில்,உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், செல்வப்பெருந்தை உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.