"முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2023-08-01 01:51 GMT

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்கள், முதிர்வுத் தொகை பெற சமூக நலத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2001 முதல் 2005 வரை பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18-வயது நிறைவடைந்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 3 பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின் விசை நிறுவனம் மூலம் 350 கோடியே 28 லட்ச ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியும் முதிர்வு தொகை பெறாதவர்கள்,

அனைத்து மாவட்ட சமூக நல அலுவலகங்களில் பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18-வயது நிரம்பிய தகுதியான குழந்தைகள் அனைவரும் ஒரு மாத காலத்திற்குள் தங்கள் பெயரில் துவங்கிய புதிய வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, முதிர்வுத்தொகை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்