ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 175 இடங்களில் 164 இடங்களை கைப்பற்றியது. அதிகபட்சமாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. நாளை ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் விஜயவாடாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, தான் முதல்வராக பொறுப்பேற்க தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக எம்.எல்.ஏக்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாகக் கூறினார்.