"இது பயத்தில் ராகுல் எடுத்த முடிவு" - போட்டு தாக்கி பாஜக

Update: 2024-06-18 02:22 GMT

ரேபரேலியில் பாஜக வென்றுவிடும் என்ற அச்சத்தால், வயநாடு எம்பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக பாஜக மூத்த தலைவர் தினேஷ் சர்மா விமர்சித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தர பிரதேசத்தை பேர்த்து ராகுல்காந்திக்கு பயம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணாக சண்டையிட முடியும் என்று கூறும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் வந்து போட்டிப்போட்டு சண்டை போட வரட்டும் என்று அழைப்பு விடுத்தார். வயநாடு மக்கள் விழித்துக்கொண்டு, பிரியங்கா காந்தியின் வாழ்க்கையை தோல்வியில் இருந்து தொடங்கி வைக்க வேண்டும் என்றும் தினேஷ் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்