குழந்தை திருமணம்.. எழுந்த குரல்..சட்டபேரவையில் கர்ஜித்த முதலமைச்சர்.. சபையில் கெத்தாக கொடுத்த சவால்
அசாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி, வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று, சட்டப்பேரவையில், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 ஆம் ஆண்டுக்கு முன், மாநிலத்தில் குழந்தை திருமணத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்தார். நான் உயிருடன் இருக்கும் வரை அசாமில் குழந்தைத் திருமணத்தை நடத்த விடமாட்டேன் என்று அவர் உறுதி அளித்தார். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணத்துக்கும் சட்டம் வழிவகை செய்கிறது என்ற முதலமைச்சர், 5-6 வயது சிறுமிகளை திருமணம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என ஆவேசமாக கூறினார்.