தமிழகம், ராஜஸ்தான், திரிபுரா, லட்சத்தீவு, அசாம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராக அரவிந்த்மேனன், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அரவிந்த்மேனன், மக்களவை தேர்தலின்போது, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.