சிறைக்கு செல்லும் முன்..தொண்டர் வயிற்றில் விழுந்த கும்மாங்குத்து-வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
குண்டூர் மாவட்டம் மாச்சரலா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணா ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர், அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும், சில வழக்குகளில் இடைக்கால ஜாமீன் ரத்தான நிலையில், போலீசார் ராமகிருஷ்ணா ரெட்டியை கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர் ஒருவரை, ராமகிருஷ்ணா ரெட்டி வயிற்றில் குத்திவிட்டு செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.