``ஒத்துழைப்பு கொடுங்க’’ - CM ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை

Update: 2025-01-10 10:02 GMT

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு இடங்களை கையகப்படுத்துவதில் மாநில அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில், அம்ரித் பாரத் ரயிலின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல ரயில்வே திட்டங்களை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் இடம் கையகப் படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை, கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். பாம்பன் பாலத்தின் பணிகள் நிறைவு செய்யபட்டுள்ளதாகவும். விரைவில் ராமேஸ்வரத்திற்கு ரயில் பயணம் தொடரும் என்று கூறினார்.

பாம்பன் பாலம் ஒரு தனித்துவம் மிக்க வடிவமைப்பு என்றும், சர்வதேச வல்லுனர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ரயில் பாலம் என தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் 76 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டு விட்டது என்றும், வரும் பட்ஜெட்டில் ரயில்வே சம்பந்தமான அறிவிப்புகளுக்கு காத்திருங்கள் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்