முதல் கையெழுத்திலேயே அதிரடி... அடுத்தடுத்த ஆக்சன்கள்... ஆந்திராவை புரட்டி போடும் நாயுடுவின் பேனா..!

Update: 2024-06-13 15:26 GMT

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த நில உரிமை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்.

முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் 30 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க அனுமதி அளிக்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்ட சந்திரபாபு நாயுடு, தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நில உரிமை சட்டத்தை ரத்து செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.

மூன்றாவதாக முதியோர் உதவித் தொகையை மாதம் 3 ஆயிரம் ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாயாக அதிகரித்தும்,

நான்காவதாக மீண்டும் ஆந்திராவில் குறைந்த விலையில் உணவு வழங்கும் அண்ணா உணவகங்களை திறக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.

ஐந்தாவதாக திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் கோப்பிலும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்