தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் அழைத்து நன்றி தெரிவித்து விருந்தளிக்க உள்ளதாக சொல்லப்பட்டிருந்தது. அதன்படி, இடம் கொடுத்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை விஜய் நேரில் விருந்து வைக்க உள்ளார். நாளை காலை 10 மணிக்கு மேல் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, பேருந்து மூலமாக நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்துவரப்பட உள்ளனர்.