நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படும் அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழகம் முழுவதும் குடிசை தொழில் போல ஓரிரு தறிகளை வைத்து நெசவு தொழில் செய்து வருபவர்களின் வீடுகளில், உள்ளாட்சி துறை அலுவலர்கள் தறி களின் எண்ணிக்கை குறித்து கணக்கீடு செய்து வருவதாகவும், தொழில் ரீதியாக தொழில் வரி விதிக்க போவதாக தகவல்கள் வருகிறது - எடப்பாடி பழனிச்சாமி
குடிசை தொழில் போல் வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படும் தமிழக அரசுக்கு கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்
நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி, விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்