ரயில்வே தொழிற் சங்க தேர்தலையொட்டி ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்களிடம், தொழிலாளர் விடுதலை முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த ரயில்வே போலீசார், சமாதானம் செய்து சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.