ஓபிஎஸ் -க்கு க்ரீன் சிக்னல் கொடுத்து வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

Update: 2024-11-22 12:52 GMT

2021 சட்டப்பேரவை தேர்தலின் போது வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்ததாகவும் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மிலானி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மனுதாரர் விண்ணப்பத்துடன் முழு விவரம் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே அனைத்து விவரங்களையும் இணைத்து மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தெரிவித்தும் உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்