பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை அடுத்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அதில், என்றும் ஜெயலலிதா வழியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் உண்மையுடன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.