நன்றி தெரிவித்த விவசாய சங்க நிர்வாகி கைது... முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனப் பதிவு
திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பான போராட்டத்தில் காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் கைது செய்யப்பட்டது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார்.
திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பான போராட்டத்தில் காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் கைது செய்யப்பட்டது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், விவசாய கடன் தள்ளுபடிக்கு தனக்கு நன்றி தெரிவித்த ஒரே காரணத்திற்காக, இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிக்கு ஒரு கையில் கடன் தள்ளுபடியும், மற்றொரு கையில் விலங்கும் போட்டிருப்பதாகக் கூறினார். மேலும், அதிகார வெறி தலைக்கேறுவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படுதோல்வி அடையப்போகிறார் என்றும் தெரிவித்தார்.