தமிழகத்தில் இளைஞர்களிடம் மது மற்றும் போதைப் பழக்கத்தின் பயன்பாடு குறித்த ஆய்வு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களிடம் போதை பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் போதை பொருள் பயன்பாடு , எந்த முறையில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் சமூக பொருளாதார பிண்ணணி, போதைப் பொருள் அதிகமாக புழங்கும் இடம், இதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் படி போதைப் தடுப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.