"முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய - சுவீடன் தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், முதலீடுகளை ஈர்க்க, மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளதாக குறிப்பிட்டார். இதன் ஒரு அம்சமாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை மேலும் உயர்த்த பரிசீலனை செய்யப்படும் என்றும், உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.