"தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம், கர்நாடகா இடையே நீர் பிரச்சனை இருக்காது" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம் - கர்நாடகா மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் பல்கலைக் கழகத்தின் 34 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய, அவர் ஆந்திராவில் கோதாவரியில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, திட்டம் வகுத்து கொடுத்து செயல்படுத்தியதாக கூறினார்.