"மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை" - ராகுல் காந்தி

பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-04 07:12 GMT
பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் வழக்கின் தீர்ப்பை தனக்கு சாதகமாக்கி பிரதமரை விமர்சித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தான் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார். மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.  

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வீடியோ கேம்ஸ் மூலமே சர்ஜிகல் தாக்குதல் நடந்திருக்கும் என்ற மோடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராகுல், இதன் மூலம் ராணுவத்தை மோடி இழிவுபடுத்துவதாக கூறினார். முப்படைகளும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட சொத்து கிடையாது என்றும் ராகுல் தெரிவித்தார். பயங்கரவாதி மசூத் அசார் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த ராகுல், அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார் என்றும் கேள்வி எழுப்பினார். வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியிடம் நேருக்கு நேராக விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், எந்த இடம் என்பதை மோடியே முடிவு செய்யட்டும் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்