சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக கூட்டணி வேட்பாளர் : நாம் தமிழர் பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராசு, நாம்தமிழர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று, சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த‌து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-04-09 01:27 GMT
கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராசு, நாம்தமிழர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று, சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த‌து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வினோதினி மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாலதி ஆகியோருக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் பேசிய சீமான், திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்பட பல கட்சிகளை விமர்சித்தார். இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில், நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் மேடையில் ஏறி சீமானை சந்தித்து, கை குழுக்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னாதக திமுக கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காத வேட்பாளர் செல்வராசு, நாம் தமிழர் கூட்டத்தில் கலந்துகொண்டது பல்வேறு கேள்விகளை 
எழுப்பியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்