"தேசிய கட்சிகள் தமிழகத்தை வஞ்சிக்கும்" - டி.டி.வி. தினகரன்
தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் காவிரி மற்றும் பாலாறு உரிமைகள் பறிபோகும் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் காவிரி மற்றும் பாலாறு உரிமைகள் பறிபோகும் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நீட் தேர்வை கொண்டு வந்த தேசிய கட்சி, மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனையும் என்றார். மக்களுக்கு நல்லது செய்யும் மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என பேசிய தினகரன், அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.