"தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர்" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது தமிழகத்தில் இருந்து சென்றவர்களால் தமிழகத்துக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
புயல் நிவாரணம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் பேசியதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், இன்னும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என அவர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், தமிழகத்துக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.