இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (13-11-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-13 15:59 GMT

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து...

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் அதிகாரிகளுடன் பெற்றோர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

கேரள மாநிலம் வயநாட்டில் மக்களவை இடைத்தேர்தலும், சேலக்கராவில் சட்டமன்ற இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய திருவொற்றியூர் தனியார் பள்ளி வாயு கசிவு விவகாரத்தில் 15 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்